MARC காட்சி

Back
சைவப் புராணங்கள் மற்றும் சைவத் திருத்தலங்கள்
000 : nam a22 7a 4500
008 : 171101b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a சைவப் புராணங்கள் மற்றும் சைவத் திருத்தலங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a சுவரோவியம்
500 : _ _ |a

          தமிழகத்தில் உள்ள சைவக் கோயில்களில் சிதம்பரம் நடராசர் கோயில் முக்கியமான ஒன்றாகும். இங்கு பல்லவர் காலம் தொட்டு சோழர், பாண்டியர் விஜயநகர – நாயக்க மன்னர்களின் காலம் வரை கோபுரங்களும், மண்டபங்களும் போன்ற கட்டுமானங்கள் தொடர்ந்து நடை பெற்று வந்துள்ளது என்பதனை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலிலுள்ள சிவகாம சுந்தரி அம்மன் சன்னதியில் உள்ள மகா மண்டப விதானத்தில் புராண ஓவியங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத்து விதானம் ஐந்து வரிசைகளாக பிரிக்கப்பட்டு அதில் ஓவியங்கள் தொடர்ச்சியாக வரையப்பட்டுள்ளது.  மையத்தில் உள்ள பழைய ஓவியங்கள் அழிந்து விட்டதனால் புதிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  பெரும்பாலான  காட்சிகள் மேற்குப் பகுதியில் துவங்கி கிழக்குப் பகுதியில் நிறைவடைகின்றன. ஆனால் வடக்கு பகுதியில் உள்ள வரிசையில் காட்சிகள் கிழக்கில் ஆரம்பித்து மேற்கில் முடிகின்றன. இங்கு வியாக்ரபாதரின் புதல்வனான உபமன்யுவின் வாழ்க்கை வரலாறு 24 தொகுப்பு ஓவியங்களாக காட்டப்பட்டுள்ளன.

          இரண்டாவது வரிசையில்,  37 தொகுப்புகள் உள்ளன. அதில் 14 தொகுப்புகள் சிதம்பரம் தல புராணத்தை அடிப்படையாகக் கொண்டு பிச்சாடனர் மற்றும் மோகினியின் தாரூக வனக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு தொகுப்பிலும் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மற்ற வரிசையில் அதிக காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுப்பும் தனித்தனியாக காட்டும்விதமாக தனிக்கட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நான்காவது வரிசையில் 32 தொகுப்பு ஓவியங்கள் உள்ளன. அதில் சிவபெருமானின் கஜசம்காரம், துன்முத்தனின் கதை நான்கு தொகுப்புகளாகவும், சேரமான் பெருமாளின் சிதம்பர பயணம் மற்றும் பல்வேறு கடவுள்களும், ரிசிகளும், சைவக் கோயில்களை வழிபடுதல் போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

          ஒவ்வொரு ஓவியத் தொகுப்புக்கும் அடியில் மேலே வரையப்பட்ட ஓவியங்களுக்கான சிறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி சிதம்பரம் கோயிலில் வழிபடுவது, அதுபோல திருப்பனந்தாள் மடத்து தம்பிரான்கள், காளி, எமன், அக்னி, இந்திரன் மற்றும் விஷ்ணு போன்றோர் வெவ்வேறு கோயில்களில் வழிபடும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. மேலும், சந்திரன், சூரியன், வால்மீகி, உபமன்யு மற்றும் மத்யமுனி போன்றோர்களும் காணப்படுகின்றனர். மேலும், பல்வேறு சைவக் கோயில்களின் தலபுராணத்தையும், அங்குள்ள இறை உருவங்களையும் ஓவியங்களாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதில், காஞ்சியில் உள்ள காமாட்சி, விருத்தாச்சலத்தில் அகத்தியர், திருவண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன், திருவானைக்காவலில் யானை வழிபடுவது, கும்பகோணத்தில் பெருமாள், திருவீழிமிழலையில் பெருமாள் கண் தானம் பண்ணுவது, மாயவரத்தில் பார்வதி மயில் ரூபத்தில் வழிபடுவது, திருவாவடுதுறையில் பசு வழிபடுவது, திருப்பதியில் நான்கு வேதங்கள் வழிபடுவது, வைத்தீஸ்வரன் கோயிலில் ஜடாயு வழிபடுவது போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

          தில்லை பொன்னம்பலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசரின் ஓவியம் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளது. அங்கு துறவிகளும், பக்தர்களும் வழிபடுகின்றனர். கை மற்றும் நெற்றியில் திருநீரு பூசிய தம்பிரானும் காட்டப்பட்டுள்ளார்.  உபமன்யுவின் வாழ்க்கை, சிதம்பரம் செல்லும் வழியில் அந்தணன் ஒருவன் வழிப்பறி கொள்ளையனால் கொள்ளையடிக்கப்படுவதும் இந்த வரிசையில் வரையப்பட்டுள்ளது. ஐந்தாம் வரிசையில், மாணிக்கவாசகரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 40 தொகுப்புகளாக வரைந்துள்ளனர். அதில், மாணிக்கவாசகருடைய பிறப்பு, வளர்ப்பு, பாண்டியன் சபையில் மந்திரியாக இருத்தல், குதிரை வாங்குதல், சிவபெருமானின் அற்புதங்கள், நரியை பரியாக்குதல், வைகை நதியில் வெள்ளம், திருவிளையாடல் புராணம் மற்றும் மாணிக்கவாசகரின் இலங்கை பயணம், தில்லையில் புத்தமதத்தினரோடு வாதம் செய்தல், சமணர்களைக் கழுவேற்றல் போன்ற காட்சிகள் அடங்கும்.

          இக்கோயிலில் பழமையான விஜயநகர கல்வெட்டுகள் வீரபூபதி ராயர் காலத்தில் துவங்கி, பின்னர்  இரண்டாம் தேவராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர், திருமலை ஸ்ரீரங்கா,(1572 -85) இரண்டான் வெங்கடராயா (1577 – 88), கிருஷ்ணப்ப நாயக்கர் (1599) இறுதியாக இரண்டாம் ஸ்ரீரங்கா இக்கோயில் கட்டுமானத்துக்கு பெரிய அளவில் கொடை வழங்கியுள்ளனர். ஆகையால் இங்குள்ள ஓவியங்கள் நாயக்கர் ஆட்சி காலத்தின் இறுதியில் 17- 18ம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கலாம். என கருதப்படுகிறது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
653 : _ _ |a சிதம்பரம், நடராசர் கோயில், சைவ புராணம், தில்லை, ஓவியம், நாயக்கர் காலம், தமிழ்நாடு, சிதம்பரபுராணம், தாருகவன ரிஷிகள், வியாக்ரபாதர், மாணிக்கவாசகர், பாண்டியன்
700 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
710 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
752 : _ _ |a நடராசர் கோயில் – அம்மன் சன்னதி |b # |c சிதம்பரம் |d கடலூர் |f சிதம்பரம்
850 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
914 : _ _ |a 11.3992956
915 : _ _ |a 79.6935475
995 : _ _ |a TVA_PNT_00051
barcode : TVA_PNT_00051
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

19.jpg

20.jpg

21.jpg

22.jpg

23.jpg

24.jpg

25.jpg

26.jpg

27.jpg

28.jpg

29.jpg

30.jpg

31.jpg

32.jpg

16.jpg

17.jpg

18.jpg

6.jpg

7.jpg

8.jpg

TVA_PNT_00051_சிதம்பரம்-நடராசர்கோயில்_ஓவியம்-0001.jpg

TVA_PNT_00051_சிதம்பரம்-நடராசர்கோயில்_ஓவியம்-0002.jpg

TVA_PNT_00051_சிதம்பரம்-நடராசர்கோயில்_ஓவியம்-0003.jpg

TVA_PNT_00051_சிதம்பரம்-நடராசர்கோயில்_ஓவியம்-0004.jpg

TVA_PNT_00051_சிதம்பரம்-நடராசர்கோயில்_ஓவியம்-0005.jpg